இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தை சர்வதேச நாடுகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரவேற்பது வேதனையானது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 153வது நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
“ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமது பிள்ளைகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை. எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே இந்தப் பணியகம் அமைக்கப்படுகின்றது. இது ஒருபோதுமே எமக்கான தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை.” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் கூறியுள்ளனர்.

0 Responses to காணாமற்போனோர் பணியகத்தை சர்வதேச நாடுகள் வரவேற்பது வேதனையானது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்