Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பீடங்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறுபிள்ளைத்தனமாக எம்மை வசைபாடி வருகின்றனர். அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

தமிழ்த் தலைமைகள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தால், அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும். புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.