யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று சனிக்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் நீதிபதியின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்கும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து யாழில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு உத்தியோகத்தர் காயம்!