மத்திய அரசாங்கத்திடமிருந்து பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது போய்விடலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனுக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது. மாறாக பலவீனமான இடத்திற்கே கொண்டுசெல்லும்.” என்றுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டதோடு, இரண்டும் ஒரே தடவையில் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

0 Responses to பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது: விக்னேஸ்வரன்