‘இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டுவோருக்கு எதிராக சட்டம் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான பணிப்புரை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சகல இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அதிகாரத்திற்கு எதிர்பார்த்துள்ள குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களும் சிறிய விடயங்களையும் இனவாத செயற்பாடுகளாக எடுத்துக் காட்ட முயன்று வருகிறார்கள். இனவாதத்தை தூண்டி அதிகாரத்தை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாகும். இது தொடர்பில் சில ஊடகங்கள் செயற்படும் விதம் கவலையளிக்கின்றன.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் நாட்டில் தூண்டுவோருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to இனவாதத்தைத் தூண்டுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: ரணில்