Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிஷ்ணன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள விவியன் பாலகிருஷ்ணன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று புதன்கிழமை மேற்கொள்ளும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர், யாழ். நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யவுள்ளதுடன், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவுள்ளார். அத்தோடு, யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பு இயல் திணைக்களத்திற்கு உதவும் திட்டம் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.

0 Responses to இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பாராட்டு!

Post a Comment

Followers