நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரு பிரதான கட்சிகளுக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினாலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஏதேனும் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகின்றபோது, இரு பிரதான கட்சிகளும் அதனை புரிந்துணர்வுடன் ஏற்று செயற்படுவது அவசியமாகும்.
தேசத்தின் நலத்திற்கான திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்படுவது காலத்தின் அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். தற்போது இந்த ஒரு சூழ்நிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதன்படியே இந்த அரசின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது: சம்பந்தன்