Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“என்னிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பறிக்க வேண்டும் என்றே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரும்பியது.” என்று அந்தக் கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சருமான பா.டெனிஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு இணங்காது செயற்பட்டமை உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி பா.டெனிஸ்வரனை அவர் வகிக்கும் அமைச்சப் பதவியிலிருந்து நீக்குமாறும், அந்தப் பதவிக்கு விந்தன் கனகரட்ணத்தை நியமிக்குமாறும் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முதலமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பா.டெனிஸ்வரன், “வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது என் மீதான குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட்டன. ஆனால், நான் குற்றவாளி என்று அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும், என்னை ஒரு மாதம் விடுப்பில் செல்லுமாறு முதலமைச்சர் கோரியதால் பிரச்சினை வந்தது.

எந்தக் குற்றமும் இழைக்காத என்னை விடுப்பில் செல்லுமாறு கோருவது சரியல்ல. அந்த முடிவுக்கு எதிராகவே நான் செயற்பட்டேன். ஆனால், அந்த இடத்தில் கட்சி என்னுடைய நிலைப்பாட்டை ஆதரித்திருக்க வேண்டும். மாறாக, நான்கு அமைச்சர்களையும் நீக்குமாறு முதலமைச்சரிடம் கோரியது. அந்தக் கோரிக்கையினூடு என்னையும் நீக்குமாறே கோரப்பட்டது. அது, சரியான முறையில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலையிட்டு பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், என்னை பதவியிலிருந்து நீக்குமாறு ரெலோ மீண்டும் கோரியிருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to என்னிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பறிக்கவே ரெலோ விரும்பியது: பா.டெனிஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com