Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘அரசியலில் கால் பதிக்க நான் தயாரில்லை. சரியான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றவே விரும்புகின்றேன்.’ என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “காணாமற்போனோர் தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், தற்காலிகமானது என்கிற போதிலும், குறித்த சட்டத்தினை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்காக தியாகம் புரிந்து இராணுவத்தினரை காட்டிக் கொடுப்பதாக அமையும். அதன்மூலம் இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள்.

தற்போதையை அரசாங்கம் நாட்டுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதது. மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாது, தமது தேவைகளை மாத்திரமே ஆட்சியாளர்கள் நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள். பொருத்தமான தலைமைத்துவத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமையொன்றின் கீழ் நான் பணியாற்றத் தயாராக இருக்கின்றேன்.“ என்றுள்ளார்.

0 Responses to அரசியலில் கால் பதிக்க நான் தயாரில்லை: கோத்தபாய

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...