Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக வர்த்த செயற்பாடுகள் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அரசாங்கம் மற்றும் சீன வர்த்தக துறைமுக தனியார் நிறுவனம் என்பன இந்த வர்த்தக நடவடிக்கைக்கு உரிமை கோருகின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் மற்றும் தனியார் பங்களிப்புடனான வர்த்தக செயற்றிட்டமாக முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க ஆகியோரினால் இந்த உடன்படிக்கைக்கு கைச்சாத்திடப்பட்டடது.

0 Responses to சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.