Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்தச் சட்டம் என்னை பாதுகாக்கும். நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை நான் தவிர்க்க மாட்டேன். சட்டப்படி சந்திப்பேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“என்னை கைது செய்ய நினைப்பவர்களுக்கு சொல்பவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கெட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா?, இந்தி தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு புரியாமல் இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைப் பட்டிருக்கிறேன் மற்றவர்களுக்கு அல்ல. தசாவதாரம் படத்தின் போது என்னை கொண்டாடினார்கள் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் பர தரப்புக்களிடமிருந்தும் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று புதன்கிழமை கமல்ஹாசன் ஊடகங்களிடம் பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் என்னை பாதுகாக்கும்: ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன் பதில்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.