Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளது போல, மாற்றுத்தலைமை எண்ணத்தினைக் கைவிட்டு தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலான அரசியல் அமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்ற நிலையில், சர்வதேசத்தின் உறுதுணையுடன் தீர்வுக்கான வழிவகைகளை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ்த் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் தென்னிலங்கை சக்திகள் குழப்பத்தினை ஏற்படுத்தி தேசிய இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கான நிம்மதியான எதிர்காலத்தினை ஏற்படுத்த தடையாக உள்ளன. மாற்றுத்தலைமை என்ற எண்ணக்கருவை கலைந்து செயற்படவேண்டும் என்ற வடக்கு முதலமைச்சரின் கால சூழலை உணர்ந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும்.

அவ்வாறின்றி, வடக்கு கிழக்கில் தமிழ் தலைமைகள் மீதான அதிருப்தி ஏற்படுமாயின் தென்னிலங்கை கட்சிகள் வளர்ச்சியடைவதற்கு காரணமாக அமையும். இவ்வாறான நிலை தமிழர்களின் எதிர்கால வாழ்வியலையும் அரசியல் ரீதியான முன்வைப்புகளையும் கேள்விக்குட்படுத்தும் என்பதுடன் அரசியல் ரீதியான கோரிக்கைகளும் ஆக்கபூர்வமற்றதாக்கிவிடும்.” என்றுள்ளார்.

0 Responses to மாற்றுத்தலைமை எண்ணத்தினைக் கைவிட்டு, தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers