மஹிந்த ராஜபக்ஷ தற்போதையை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ள போதிலும், அவரிடமிருந்து உதவிகள் பெறும் தேவைப்பாடுகள் ஏதும் இல்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்படி ஆள்வது என்பது தொடர்பாக, உங்களின் ஆலோசனை, நிச்சயமாக வேண்டாம். நாங்கள் துப்பரவு செய்வதற்காக, நீங்கள் விட்டுச் சென்றுள்ள குப்பையைப் பாருங்கள்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர