ISIS தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலை கைப்பற்ற கடந்த 8 மாதமாக அமெரிக்க கூட்டணி நாடுகளின் வான்படை உதவியுடன் முன்னேறி வந்த ஈராக்கிய இராணுவம் பொதுமக்கள், தீவிரவாதிகள் மற்றும் படை வீரர்கள் அடங்கலாக கடும் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அந்நகரைக் கைப்பற்றி இருப்பதாகத் தற்போது அறிவித்துள்ளது.
உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி டைகிரிஸ் நதியில் குதித்த ISIS போராளிகளில் 30 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை காலை ஈராக் துருப்புக்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் ஈராக்கின் மிகப் பழமையான மோசுல் நகரின் மத்தியில் பாய்ந்து செல்லும் டைகிரிஸ் நதிக் கரையோரம் ஈராக் இராணுவம் தனது தேசியக் கொடியைப் பறக்க விட்டுள்ளது. 3 வருடங்களுக்கு முன்னர் சிரிய எல்லையில் உள்ள மோசுல் நகரை ISIS கைப்பற்றிய போது அங்கிருந்த பெரும்பான்மையான யாஸிதிகள், குர்துக்கள் மற்றும் கிறித்தவர்களை அங்கிருந்து விரட்டி அடித்திருந்தது.
மோசுலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்களையும் சின்னங்களையும் அழித்தொழித்த ISIS ஈராக், சிரியா மற்றும் துருக்கியின் ஒரு பகுதி என்பவற்றை இணைத்து இஸ்லாமிய தேசமாக உருவாக்கத் திட்டமிட்டிருந்தது. இதை அடுத்த இலக்காக மத்திய கிழக்கில் லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் துருக்கி என்பவற்றையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் ரக்கா நகரைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ISIS தமது பிடியிலுள்ள நகரங்களில் வசிக்கும் யாஸிடிகள், குர்துக்கள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவ வேண்டும் என்று கட்டளையிட்டதுடன் மீறுபவர்களை பல ஆயிரக் கணக்கில் விரட்டி அடித்தும் பலரை சுட்டுக் கொலை செய்தும் வந்தது. மேலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க முன்வரும் தொண்டூழிய அமைப்பினரையும் வெளிநாட்டினரையும் கடத்தியதுடன் சிலரை சிரச்சேதமும் செய்து வந்தது.
இந்நிலையில் மோசுல் நகரம் தற்போது ஈராக் இராணுவத்தின் வசம் வீழ்ந்திருப்பதால் சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளில் இருந்து ISIS இனால் பிணைக் கைதிகளாகக் கடத்தப் பட்டவர்கள் பற்றிய விபரங்களைப் பெற முயற்சித்து வருகின்றன. இதில் 2014 ஆம் ஆண்டு கடத்தப் பட்ட 39 இந்தியர்களும் அடங்குவதுடன் குறித்த நபர்களின் குடும்பங்கள் அவர்கள் இன்னமும் பத்திரமாக இருக்கின்றனர் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த இந்தியர்கள் குறித்த தகவல்களைப் பெற இந்திய வெளியுறவுத் துறை ஆவன செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈராக்கின் மோசுல் நகரம் இராணுவம் வசமாகின்றது: ISIS தீவிரவாதிகள் பின்னடைவு