பாகிஸ்தானில் ஏராளமான ஆயுதங்களுடன் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 10 போராளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
அண்மைக் காலமாகப் பாகிஸ்தானில் இராணுவம், போலிஸ், எலைட் ஃபோர்ஸ், உளவுத்துறை என்பன இணைந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றை அடிப்படையாக வைத்து சியோவால் பகுதியில் அதிரடியாக நுழைந்த போலிசாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து 10 தீவிரவாதிகளை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப் பட்டன. இதேவேளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சின் உத்தரவின் பிரகாரம் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் தமது படை நடவடிக்கையை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிப்பர் எனத் தெரிய வருகின்றது.

0 Responses to பாகிஸ்தானில் ஏராளமான ஆயுதங்களுடன் தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 10 பேர் கைது