Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க பொதுக்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, அ.தி.மு.க.வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே.சசிகலாவும், சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க.வில் வீசிய புயல் அக்கட்சியை 2 ஆக உடைத்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா), சசிகலா தலைமையில் (அ.தி.மு.க. அம்மா) அணியாக உருவெடுத்தது.

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை பொதுக்குழு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க. (அம்மா- புரட்சித்தலைவி அம்மா) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 பிரிவு 7-ன் படி அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு வருகிற 12-9-2017 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 3,200 பேர் உள்ளனர். இவர்களில் தினகரன் அணியை தவிர்த்து மற்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக் குழு கூட்டப்பட்டது. தற்போது அவரை நீக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழு 12ஆம் திகதி கூடுகிறது: சசிகலா, தினகரன் நீக்கப்படுகிறார்கள்?!

Post a Comment

Followers