அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் சட்டம் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொலிஸாரின் ஆளுமையை கட்டியெழுப்பும் வகையில் விரைவில் பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதிக்கான பல்கலைக்கழகமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளிள் இடம்பெறக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், சர்வதேச பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து நடாத்தும் விசேட பயிற்சிப்பட்டறை நேற்று செவ்வாய்க்கிழமை காலை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசியலமைப்பில் 13வது திருத்தம் உள்ளபோதும் பொலிஸாரின் அதிகாரம் தொடர்ந்தும் குறைத்தே வைக்கப்பட்டுள்ளது. நாம் காலனித்துவ காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதே சட்ட முறைமைகளையே தொடர்ந்தும் பின்பற்றி வருகிறோம்.எனினும் இது நவீன காலத்துக்கு பொருத்தமற்றது. எனவே 13வது திருத்தத்துக்கு அமைய பொலிஸாரின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் சட்டம் மறுசீரமைக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to 13வது திருத்தச் சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும்: ரணில்