தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நிழலாக 29 ஆண்டுகள் இருந்தேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வந்தார். கருணாநிதி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக வைகோ வருகையையொட்டி, கோபாலபுரத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் வைகோவை வரவேற்றனர்.
கருணாநிதியை சந்தித்த பின் வைகோ அளித்த பேட்டியில், “1953ஆம் ஆண்டுக்கு முன் கல்லுாரி மாணவராக இருந்த போது முதன் முதலாக கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தேன். திமுகவிற்கான தொண்டர் படையை நான் தான் முதன் முதலில் உருவாக்கினேன். நெருக்கடிநிலை காலத்தின்போது கருணாநிதி எனக்கு ஆதரவாக இருந்தார். கருணாநிதிக்கு 29 ஆண்டுகள் நிழலாக இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக என் கனவில் வந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. செப்-5இல் நடைபெறும் முரசொலி விழாவில் கலந்து கொள்வேன்.” என்றுள்ளார்.

0 Responses to 29 ஆண்டுகள் கலைஞரின் நிழலாக இருந்தேன்; மு.கருணாநிதியைச் சந்தித்த பின் வைகோ பேச்சு!