Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மூன்று மாதங்களாக அ.தி.மு.க. செயற்படாமல் இருக்கின்றது. ஆகவே, நிச்சயமாக அ.தி.மு.க. தலைமைச் செயலகத்துக்குச் சென்று கடமைகளைக் கவனிப்பேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்சியில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. துணைப் பொதுச் செயலரை கட்சி அலுவலகத்துக்குள் நுழையக்கூடாது என்று சொல்ல யாரும் முடியாது. 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் நேரிடையாக என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to கடந்த 3 மாதங்களாக அ.தி.மு.க. செயற்படாமல் இருக்கிறது: டி.டி.வி.தினகரன்

Post a Comment

Followers