Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிராமப் பாங்கான ஒரு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு  மையமான USGS தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் மோசமான உயிரிழப்புக்களோ அல்லது  கடுமையான சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.

2008 ஆம் ஆண்டு 8 ரிக்டர் அளவில் சிச்சுவானைத் தாக்கியிருந்த பாரிய பூகம்பத்தில் 87 000 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் காணாமற் போயும் இருந்தனர். இன்று ஏற்பட்ட நிலநடுக்கமும் இப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவில் தான் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய பூகம்பம் சிச்சுவானின் தலைநகரான செங்க்டு இலிருந்து 284 Km தொலைவில் 10 Km ஆழத்தில் தான் தாக்கியுள்ளது. சீனாவின் மேற்கு மலைப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு பகுதிகள் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படும் பகுதிகளாகும்.

இதேவேளை சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 24 பொது மக்கள் கொல்லப் பட்டதுடன் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். குறித்த ஜெங்டி கிராமத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் இதுவரை 577 பொது மக்கள் பாதிக்கப் பட்டதுடன் 71 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல பாதைகளும் பாலங்களும் கூட சேதமடைந்துள்ளன. காணாமற் போனவர்களைத் தேடும் பணியும் நிவாரணப் பணியும் முடுக்கி விடப் பட்டுள்ளன.

0 Responses to சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்

Post a Comment

Followers