Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் படைகள் எந்தச் சவாலையும் சந்திக்கத் தயாராகவே இருக்கின்றன என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கப்பட்ட 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று பேசினார்.

அப்போது, “1962இல் நடந்த போரில் நாம் பாடம் கற்றுள்ளோம். எனவே இந்தியப் படைகள் தற்போது நாட்டின் பாதுகாப்பிற்காக எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளன. அதேபோல் பாகிஸ்தானால் 1948இல் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதிகளையும் நமது படைகள் மீட்டெடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தி 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். சுதந்திரம் பெற்ற பிறகு இத்தனை காலங்களில் நமது நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளது.

தற்போது எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு நமது நாடு முன்னேறி உள்ளது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஏனெனில் 1962இல் சீனாவுடனான போர் நமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத்தந்துள்ளது. தற்போது நமது இராணுவம் பக்கத்து நாடுகளில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் முறியடிக்கும் திறனை பெற்றுள்ளது.

ஒரு பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் தீவிரவாதத்திற்கு பலியாகி உள்ளனர். எனவே தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒரே குரலில் செயல்பட வேண்டும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் பணம் ஆதிக்கம் செலுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும். பல்வேறு மதம் மற்றும் ஜாதியினர் வசிக்கும் நமது நாட்டில் அதன் ஒற்றுமை, அமைதியை எப்போதும் காப்பது நமது கடமை.” என்றுள்ளார்.

0 Responses to எந்தச் சவாலையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயார்: அருண் ஜெட்லி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.