வடக்கில் மீண்டும் ஒரு பதற்றமான நிலைமையினை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தினைச் சீர் குலைப்பதற்கு ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
“வடக்கில் தமிழ்த் தலைமைகளுக்குள் இனவாதமற்ற ஒரு தரப்பினரும், விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முன்னிலைப்படுத்தும் இனவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு தரப்பினரும் இருக்கின்றனர். இவ்வாறான சம்பவங்களின் மூலம், மீண்டும் ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to வடக்கில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி: தயாசிறி ஜயசேகர