இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக்கு எதிராக எவ்வகையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்பொழுது தமது வாழ்வாதாரத்தை ஆரம்பித்திருக்கும் வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடல்சார் தீர்ப்புத் தடைச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அத்துமீறிய இந்திய மீனவர்களின் பிரச்சினையில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டுள்ளது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கைதுகளை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பெரும் எண்ணிக்கையான அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அறுபது பேர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் எமக்கு எதிராக தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அது எமக்குப் பிரச்சினை இல்லை. மீனவர் விவகாரம் தொடர்பில் நாம் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறோம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. யுத்தத்திலிருந்து மீண்ட வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
அத்துமீறிய மீன்பிடியைத் தடுப்பதற்கு வெளிநாட்டு படகுகளைத் தடைசெய்யும் விசேட சட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டாலும் விடுவிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது. எனினும், நான் அமைச்சராகப் பதவியேற்ற பின்னரே கைதுகளை விடுவித்ததுடன், படகுகளை விடுவிக்காது தடுத்துவைக்கும் கடுமையான தீர்மானத்தை எடுத்தேன். இது சவாலாக இருந்தாலும் முக்கியமான முடிவாக உள்ளது. அது மாத்திரமன்றி எல்லை கடந்துவரும் மீனவர்களைக் கைதுசெய்வதற்கு போதியளவு அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை: மஹிந்த