Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான் அமைச்சுப் பதவிலியிருந்து விலக மாட்டேன். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அந்த அதிகாரம் இருந்தால் என்னை நீக்கட்டும். அவர் நீதியரசர் என்றால், நான் சட்டத்தரணி. என்னை பதவியிலிருந்து நீக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.” என்று வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரவையில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவுக்கு தமிழரசுக் கட்சி வந்தது. அதனையடுத்து, சுகாதார அமைச்சராக பதவி வகித்த ப.சத்தியலிங்கம் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார்.

இந்த நிலையிலேயே, பா.டெனீஸ்வரனையும் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.

பா.டெனீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அதனை, விசாரணைகளை முன்னெடுத்த விசாரணைக் குழுவும் சொல்லியிருக்கின்றது. நானும் கூட என் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்பதற்கு தயார் என்று சொல்லியிருக்கின்றேன். அப்படியான நிலையில், தேவையற்ற ரீதியில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகக் கோருவது சரியல்ல. நான் விலக மாட்டேன்.” என்றுள்ளார்.

0 Responses to நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்; முதலமைச்சருக்கு அதிகாரமிருந்தால் நீக்கட்டும்: பா.டெனீஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.