தமிழக ஆட்சியைக் கலைக்க முகாந்திரம் ஏதும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை அதை காரணம் காட்டி தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனையடுத்து பிளவுபட்ட இரண்டு அணியான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் மீண்டும் இணைந்தன.
இந்த நிலையில் அணிகள் இணைப்புக்கு பின்னர் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டெல்லி சென்று நேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும், இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் நிலவரம்தான் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சிப்பூசல். இது குறித்து ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ராஜ்நாத் சிங் கூறியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

0 Responses to அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்சினைக்காக ஆட்சியைக் கலைக்க முடியாது: ராஜ்நாத் சிங்