Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெங்களூரு விடுதியில் வருமான வரித்துறையினர் இன்று புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில் 6 காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், மற்றவர்கள் அணி மாறாமல் இருக்க, சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

மொத்தமுள்ள 57 காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களில் 44 பேர் பெங்களூரு விடுதியில் கடந்த 4 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் இன்று (ஆக.,02) காலை 07.00 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு அணி மாறி ஓட்டளிக்க காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.12 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

0 Responses to காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெங்களூரு விடுதியில் வருமான வரிச் சோதனை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.