தமிழ் மக்களாகிய நாங்கள் அதீதியாக எதையும் கேட்காது, நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழாராச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய பாதையில் செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் மூலம் சமத்துவமும் சமாதானமும் ஏற்படுத்தப்படவுள்ளன. அரசியலமைப்பு வெற்றி பெற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து, சுயகௌரவத்துடன், சுய அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழக்கூடிய வகையில் அந்த இலக்கை அடைய வேண்டிய கடமை எமது அனைவருக்கும் உரியது.” என்றுள்ளார்.

0 Responses to நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற வேண்டும்: சம்பந்தன்