Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பஞ்சாப், அரியானா பகுதிகளில் இடம்பெற்றுள்ள கலவரங்களில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். தேரா கச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைமைச் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை நீதிமன்றம் நிரூபனம் செய்ததை அடுத்து அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  கலவரங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

ரயில் நிலையஙக்ளுக்கு தீவைத்தும், கடைகளுக்கு தீ வைத்தும் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரகசிய புலனாய்வு பிரிவினர் இது குறித்து முன்கூட்டியே எச்சரித்தும், அம்மாநில அரசு பாதுகாப்பு இராணுவ வீரர்களை களமிறக்குவதில் தாமதம் காட்டிவிட்டது என விசனம் எழுந்துள்ளது.

தற்போது அரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகார் பகுதிகளில் காலவரையற்ற 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேரா சச்சா தலைவர் ராம் ரஹிமை குற்றவாளி என அறிவித்த பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நாளை அவருக்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது. கலவரம் குறித்து பாராமுகமாக இருந்த மத்திய அரசு இது மாநிலப் பிரச்சினை எனக் கூறியதை அடுத்து, கோபமடைந்த பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், ஹரியானா இந்தியாவில் இல்லையா என கேள்வி எழுப்பினார். அதோடு பாஜகவுக்கு மட்டும் மோடி பிரதமர் அல்ல, இந்தியா முழுவதும் அவர் தான் பிரதமர் என தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்நிலையில் ஹரியானாவின் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவேண்டும் என சிபிஐ நீதிமன்றம் நாளை வாதிடவுள்ளது. பலாத்கார வழக்கில் குறைந்தது 7 அல்லது 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேவேளை தேசா சச்சா சௌதா அமைப்பிடமிருந்து இழப்பீடு பெற்று, வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை இன்று இந்திய வானொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  ‘தனிநபர், குறிப்பிட்ட சமூகம் அல்லது அரசியல் கட்சி உள்ளிட்டவை மேலுள்ள விசுவாசத்தினால் வன்முறையில் ஈடுபடுதலை அரசு பொறுத்துக் கொள்ளாது. சட்டத்தை தன் கையில் எடுப்போர் தண்டிக்கப்படுவர்’ என்று எச்சரித்துள்ளார்.

0 Responses to ஆன்மீகத் தலைவர் குர்மீத் ராம் ரகீம் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபனமும் பஞ்சாப், அரியானா கலவரங்களும்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.