ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே வங்கி ஒன்றின் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் ஐவர் பலியாகி இருப்பதாக ஆப்கான் உட்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலில் குறித்த வங்கி உட்பட அருகே இருந்த பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் 8 பேருக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
இந்தவருட முதல் 6 மாதங்களில் மட்டும் காபூலில் தற்கொலைக் குண்டு தாக்குதல்களால் 209 பொது மக்கள் கொல்லப் பட்டும் 777 பேர் காயமடைந்தும் இருந்ததாகப் புள்ளி விபரம் கூறுகின்றது. ஆப்கானில் இருக்கும் அமெரிக்க துருப்புக்கள் அங்கு கால வரையறை இன்றி தொடர்ந்து தங்கி இருக்க அனுமதி வழங்கி ஒரு வாரத்துக்குள் இத்தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்! : ஐவர் பலி