Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். அவர் மீண்டும் செயற்படுவதில் எந்த தவறும் கிடையாது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பின்னிற்கப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “வேறு கட்சிக்காக ஆட்சேர்க்கும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என என்னை கேட்கின்றனர். இன்னும் நாம் அவ்வாறான முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களை அகற்ற முடியும். கட்சியை உடைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம். சுதந்திரமாக செயற்பட அவர்களுக்கு இடமளித்துள்ள நிலையில் அவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். வேறு கட்சி உருவாக்க முயல்கின்றனர். இவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும்.” என்றுள்ளார்.

0 Responses to விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.