Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களைப் போலல்லாது, நாட்டு மக்கள் அனைவரையும் சுதந்திரமாக செயற்படும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றினணந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும்.

நாடு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் தீர்மானிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் நமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு அதிகளவு பணங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உமாஓயா பல்நோக்கு திட்டம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி என மேற்கொள்ளப்பட்டமைக்கு அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக பல அர்ப்பணிப்பூடான செயற்பாடுகளை செய்து வருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலையை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது: ரணில்

Post a Comment

Followers