புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது. இதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு: பொது வாக்கெடுப்பு நடத்த சுதந்திரக் கட்சி இணக்கம்; த.தே.கூ.விடம் மைத்திரி உறுதி!