Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கென்யாவில் இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் விறுவிறுப்பாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொது மக்கள் மிகவும் உற்சாகத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற ஆயுதம் ஏந்திய போலிசார் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவலுக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

இன்றைய அதிபர் தேர்தலில் கென்யாவின் ஆளும் கட்சியான ஜுப்ளி கட்சியின் தலைவரும் தற்போதைய அதிபருமான 55 வயதாகும் உஹிரு கென்யாட்டா போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து முன்னால் பிரதமரான 72  வயதாகும் ரைலா ஒடிங்கா போட்டியிடுகின்றார். இன்றைய வாக்குப் பதிவில் வன்முறைகளைத் தவிர்த்து இயன்றளவு அமைதியான முறையில் வாக்களிக்கும் படி கென்ய மக்களை அந்நாட்டு அதிபர் கென்யாட்டா ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய தேர்தல் அதிபர் தேர்தலாக மாத்திரமன்றி கவர்னர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் என சுமார் 1800 இடங்களுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகவும் அமைந்துள்ளது. கென்யாவில் 2007 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது ஏற்பட்ட வன்முறைகளில் சுமார் 1000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். அதை அடுத்து 2013 இல் நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடைபெற்றது. கென்யா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் அதிபராகப் பதவி ஏற்றவரின் மகன் தான் தற்போது அதிபராக உள்ள கென்யட்டா ஆவார்.

பிரிட்டனிடம் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக வலிமையான பொருளாதாரத்தை கென்யாவில் கட்டி எழுப்ப சீனாவால் வழிநடத்தப் பட்ட உட்கட்டமைப்பு செயற்திட்டங்களே காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கென்யாவில் அதிபர் தேர்தலில் ஏராளமான பொது மக்கள் வாக்களிப்பு

Post a Comment

Followers