Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜப்பான் வான் பரப்பினூடாகப் பயணித்து ஜப்பான் கடலில் விழும் வண்ணம் வடகொரியா இன்று செவ்வாய்க்கிழமை ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பது சர்வதேசத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலினால் உலகளாவிய ரீதியில் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சடுதியாக சரிவைச் சந்தித்துள்ளன. ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேலாக 2700 Km தூரம் பறந்து ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரியாவின் இந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணையால் ஜப்பான் கடலில் இருந்த எந்தவொரு கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இக்கடற்பரப்புக்கு அண்மையில் தான் அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள குவாம் தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளன. ஜப்பான் ஊடகம் இது தொடர்பில் வெளியிட்ட செய்தியில் வடகொரியாவின் இச்செயல் மூலம் வடக்கு ஜப்பானில் உள்ள அனைத்து மக்களும் இராணுவமும் விழிப்புணர்வுடன் அடுத்த தாக்குதலுக்கு இடம் கொடுக்காது தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது எனப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியாவின் போர் அச்சுறுத்தல் கடந்த இரு தசாப்தங்களில் இவ்வருடமே அதிகபட்சமாக பதியப் பட்டிருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐரோப்பிய பங்கு சந்தையில் தாக்கம் செலுத்திய வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை

Post a Comment

Followers