Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.திமு.க. இரையாகக் கூடாது என்று அ.தி.மு.க தோழமைக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், “டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது. தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேச வேண்டும்.” என்றனர்.

0 Responses to பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாது: கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி கூட்டாக வேண்டுகோள்!

Post a Comment

Followers