இலங்கையை ஒருபோதும் தங்களுடைய பாதுகாப்புத் தளமாக பாவிக்கப் போவதில்லை என்று சீனா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான சீனத் தூதுவர் Yi Xianliang இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும். கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை தெளிவாக அறிய முடியும்.
இலங்கைக்கு சீன உளவுப்பிரிவு அதிகாரிகளோ, இராணுவத்தினரோ அழைத்துவரப்படவில்லை. இலங்கை, சீனாவின் பாதுகாப்பு மையமாக பயன்படுத்தப்படக்கூடும் என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பாவிக்கப் போவதில்லை: சீனா அறிவிப்பு!