“இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா. உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்திய நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் தொடங்க திட்டம். 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி!