‘நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி புறப்படுவோம். இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று புதன்கிழமை திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
அங்கு அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி புறப்படுவோம், சொத்து சேர்த்தால் மட்டும் போதாது, அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த சமூகத்தின் மீதான கோபம் எனக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தொடர்ந்து போராடுங்கள், தொடர்ந்து கேள்வி கேளுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தலைமையேற்க எனக்கு தைரியம் வந்துவிட்டதா என கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டதா?” என்றுள்ளார்.

0 Responses to தேவை ஏற்படும் போது கோட்டையை நோக்கி புறப்படுவோம்: கமல்