யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தில் இரு பொலிசார் காயமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் யாழில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேசத்தைச் சேரந்த, மது என அழைக்கப்படும் தேவராசா மதுஷன் (20), மானிப்பாயைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ் (23) ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to யாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது!