Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரவி கருணாநாயக்க எடுத்த தைரியமான முடிவு பாராட்டுக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்காக இவ்வாறானதொரு முன்னுதாரண செயற்பாட்டை அமைச்சர் ரவி கருணாநாயக்க செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நபரொருவர் தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் வரை அவர் நிரபராதி என அங்கீகரிப்பது அடிப்படை உரிமையாகும். அந்த வகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் இன்னும் குற்றவாளியாக காணப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்ய எடுத்த தைரியமான முடிவைப் பாராட்டுகின்றோம்.

நல்லாட்சியினதும், மக்களினதும், நாட்டினதும் நலனுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது ஏனைய பலரும் பின்பற்றவேண்டிய சிறந்த முன்னுதாரணமாகும்.

கடந்த காலங்களில் அரச பதவிகளை வகித்த பலர் மீதும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான எவரும் இவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ரவி கருணாநாயக்கவின் முடிவு பாராட்டுக்குரியது: சம்பந்தன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.