முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை அராசாங்கம் நிராகரித்துள்ளது.
இறுதி மோதல்களில் நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராணுவ வீரர்கள் மேற்கொண்ட தவறுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டு குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர், சித்திரவதைகளை மேற்கொள்ள ஜகத் ஜயசூரிய காரணமாக இருந்ததாக தெரிவித்து பிரேசில் மற்றும் கொலம்பியாவில் உள்ள நீதிமன்றங்களில் தெற்கு அமெரிக்க மனித உரிமை அமைப்பு போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜின சேனாரத்ன, “காணமல் போதல், கொலை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குறிப்பிட்ட சில தவறுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தத்தின் போது நடந்தவற்றுக்கு இராணுவ தளபதி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது நடப்பவை அனைத்தையும், சில தரப்பினர் மனித உரிமை மீறல்களாக கருதுகின்றனர். பொதுமக்களுக்கு எதிராகவன்றி, பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டு, அதில் வெற்றியும் பெறப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரிப்பு!