Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“புதிய இந்தியாவை 2022இற்குள் படைத்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அங்கு பிரதமர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது, “நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். கிருஷ்ண ஜெயந்தியையும், சுதந்திர தினத்தினையும் இன்று ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம்.

2022இற்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம். நாட்டில் அனைவரும் சமம்; நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் நினைக்கும் புதிய இந்தியா உருவாகும். மக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியா பிறக்கும்.

தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை; நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய இந்தியா படைத்திட உறுதி ஏற்போம்; சுதந்திர தின உரையில் மோடி!

Post a Comment

Followers