“கடந்த காலங்களில் கட்சி ரீதியில் பிரிந்து நின்று சுயநல அரசியல் செய்ததால் நாடு பின்னடைந்தது. அதனை, உணர்ந்ததாலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பல கட்சிகளுடன் இணைந்து நாம் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தினோம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அளுத்கம கந்த விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய அரசாங்கத்தின் மூலம் தான் ஒரு நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப முடியும். தேசிய நெருக்கடிகளுக்கு நாம் ஒன்றுபட்டுத் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வரட்சி, வெள்ளம் மற்றும் டெங்கு போன்ற பாதிப்புகளால் நாட்டின் அபிவிருத்தி வேகம் குறைந்துவிடும் எனப் பயந்தோம். ஆனால் கடந்த வருடத்தை விட சமமாகவோ அல்லது அதனிலும் அதிகமாகவோ பொருளாதார அபிவிருத்தி ஏற்படுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி கூறுவதோடு வரட்சி காரணமாகப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சரியான வேளையில் மழை கிடைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் இதைவிட அதிகரித்திருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to கட்சி ரீதியாக பிரிந்து சுயநல அரசியல் செய்ததாலேயே நாடு பின்னடவை சந்தித்தது: ரணில்