தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக் கொண்டனர். வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!