Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய சர்வதேச நாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்த, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தினம் தொடர்பில் வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக வடக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு- கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படவில்லை.

இதனால், அரசாங்கத்திற்கு மேலதிகமாக இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே சர்வதேசம் இலங்கை அரசுக்கு போதிய அழுத்தங்ககளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எமது ஆதரவுண்டு.” என்றுள்ளது.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers