Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில சிறு வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வடக்கில் வலுப்படுத்துவதினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக யாழில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, இச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை களத்தில் இறக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முப்படைகளுக்கு பதிலாக, சிறந்த நிர்வாக பண்புகளையும் நேர்மையையும் கொண்ட பொலிஸாரை வடக்கு- கிழக்கில் நிறுத்தி, வன்முறைகள், வாள்வெட்டுக்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு, நேர்மையாகவும், வினைத்திறனுடனும், எந்தவித ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இடமளிக்காத பொலிஸ் அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, வடக்கு- கிழக்கில் தொடரும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

0 Responses to சில வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதை ஏற்க முடியாது: மாவை

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.