Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடர்ந்து வரும் அரசியல் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் மக்களின் சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே நாம் இன்று அனைத்துக் கட்சிகளினதும், முக்கியமாக மக்களின் சம்மதத்துடன் இந்த புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முனைகின்றோம்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெறுவதுடன், மக்களது அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பினை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாட்டில் நிரந்தரமானதும், உறுதியானதுமான சமாதானத்தினை அடைய முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாலே சமாதானம் ஏற்படும்: சம்பந்தன்

Post a Comment

Followers