வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மானிப்பாயில் உள்ள யாழ். வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை 04.30 அளவில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களில் சுழற்சி முறையில் வழங்கப்பட்ட ஆசனத்துக்கே தமிழரசுக் கட்சியின் சார்பில் இ.ஜெயசேகரம் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, அந்தப் பதவியில் இருந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த மயூரனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே, இ.ஜெயசேகரம் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக இ.ஜெயசேகரம் பதவியேற்பு!