Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊழல் அணிகள் ஆட்சிப்பொறுப்பில் அமர பிரதமர் மோடி துணை நின்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்தனர்.

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் அளித்துள்ள கடிதத்தில், நல்ல முதல்வராக செயல்படுவார் என்ற எண்ணத்தில் பழனிசாமிக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் அவரோ அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஊக்குவித்து வருகிறார் என்றும் சாடினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to அ.தி.மு.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.