Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, வடக்கு மாகாண சுகாதார அமைச்சரான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தன்னுடைய பதவியிலிருந்து விலகவுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் விவகாரம் பேசப்பட்டது.

அதன்போதே, தமிழரசுக் கட்சியின் ப.சத்தியலிங்கம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதுடன், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாரையும் அமைச்சர்களாக நியமிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான அதிகாரங்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதனால், தமிழரசுக் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. அதனாலேயே, அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

0 Responses to வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.